ஷா ஆலாம், நவ 11 — சிலாங்கூரில் உள்ள இந்திய சமூகத்தினர், தங்கள் பகுதிகளில் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக புதிய சமூக மையங்களை (Community Centres) அமைக்க மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். சமூக நலன் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்த இத்தகைய மையங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
மக்களிடையே உறவுகளை வலுப்படுத்தவும், பல்வேறு சமூக மற்றும் கல்வி நிகழ்ச்சிகளுக்கான மையமாக அமையவும் இத்தகைய வசதிகள் அவசியமானது என சுங்கை ராமல் தொகுதியின் இந்தியச் சமூகத் தலைவர் சிவகுமார் முத்து @ அருணாசலம் தெரிவித்தார். இதன் மூலம் மக்களிடையே ஒற்றுமை மற்றும் இணக்கத்தை வளர்க்க முடியும் என்று அவர் கூறினார்.
“ஒவ்வொரு பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பின், அங்கு ஒரு புதிய இந்திய சமூக மையம் அமைக்கப்பட வேண்டும். அதனுடன், சமூக நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும் விழாக்கள் நடத்த தனிப்பட்ட ‘பலாய் ராயா’ தேவை என மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள வசதிகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாததால், இந்தக் கோரிக்கை வரவிருக்கும் அடுத்தாண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டில் பரிசீலிக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கு முன்பு, இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக RM42.25 மில்லியன் மதிப்புள்ள பல புதிய திட்டங்களைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார். அதில் இலவசப் பிரத்தியேக வகுப்புகள், Peranti Siswa திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குதல் போன்றவை அடங்கும்.
இந்த திட்டங்கள், மலேசியா மடாணி என்ற தேசிய நோக்கத்துடன் இணைந்து, இந்திய சமூகத்தின் மேம்பாடு மற்றும் கல்வி வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்திய சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக ஒற்றுமை ஆகிய அம்சங்களில் முன்னேற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




