கோத்தா கினாபாலு, நவ 11- பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியிலிருந்து கினாபாலு முற்போக்கு பெர்சத்து கட்சியான UPKO வெளியெறியது.
இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாக UPKO கட்சியின் தலைமை செயலாளர் டத்தோ நெல்சன் அங்காங் கூறினார்.
UPKO கட்சியின் சிறப்பு உச்சமன்ற கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் கட்சியின் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலிருந்து UPKO கட்சி வெளியானதை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடமும் அக்கூட்டணியில் உள்ள உறுப்பு கட்சிகளிடமும் முறையாக தெரிவிக்கப்படும் என்று அக்கட்சி விளக்கம் அளித்தது.
சபா மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்த நிலையில் ஹராப்பான் கூட்டணியிலிருந்து விலகும் முடிவு குறித்து பரிசீலித்து வந்தோம். தற்போது முடிவை எடுத்து விட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சபா மாநில சட்டமன்ற தேர்தலில் UPKO 12 சட்டமன்ற இடங்களில் போட்டியிட்டது. ஆனால் அக்கட்சி வெறும் ஒரேஒரு இடத்தை மட்டுமே வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.




