சுபாங் ஜெயா, நவ 11- சுபாங் ஜெயா SS13-இல் உள்ள 3K வளாகத்தின் நீச்சல்குளம் (Kolam Renang Kompleks 3K, SS13 Subang Jaya), வருடாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக இன்று (நவம்பர் 11, 2025, செவ்வாய்க்கிழமை) தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீச்சல்குளம் மூடப்படும் நேரமானது மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஆகும்.
இந்தப் பணிகளுக்குப் பிறகு, நீச்சல்குளம் சேவை இரவு 7.30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.
இந்தத் தற்காலிக மூடல் காரணமாக ஏற்படும் சிரமங்களுக்கு எம்பிஎஸ்ஜே (MBSJ) வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.




