ad

Rapid Bus அனைத்து சேவைகளையும் ஒரே பயன்பாட்டில் ஒருங்கிணைக்கிறது

10 நவம்பர் 2025, 10:14 AM
Rapid Bus அனைத்து சேவைகளையும் ஒரே பயன்பாட்டில் ஒருங்கிணைக்கிறது

கோலாலம்பூர், நவம்பர் 10 - Rapid Bus Sdn.Bhd நிறுவனம் தங்களது முன்பதிவு பயன்பாட்டின் ஒருங்கிணைப்பின் இறுதி கட்டத்தை வரும் சனிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது. இதன் மூலம் அனைத்து சேவைகளும் ஒரே தளமான ரேபிட் On-Demand பயன்பாட்டில் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த இறுதி கட்டம் முன்பு Kummute பயன்பாட்டைப் பயன்படுத்திய பகுதிகளை மூடி, அனைத்து மண்டலங்களையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் இணைக்கும் முயற்சியாகும் என்று அறிவித்துள்ளது.

“இந்த ஒருங்கிணைப்பு மூன்று தனித்தனியான பயன்பாடான Mobi, Trek Rides மற்றும் Kummute ஒன்றிணைக்கப்பட்டு, முன்பதிவு செயல்முறையை எளிமையாக்கி, ஒரே மாதிரி மற்றும் பயனருக்கு நெருக்கமானதாக ஆக்குகிறது,” என்று Rapid Bus வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் இது 2025 ஜூன் மாதத்தில் தொடங்கிய ரேபிட் கேஎல் On-Demand சேவையின் டிஜிட்டல் மாற்றத்தின் நிறைவு கட்டமாகும் என Rapid Bus நிறுவனத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி கு ஜமில் ஜகரியா தெரிவித்தார். “அனைத்து மண்டலங்களும் Rapid On-Demand பயன்பாட்டில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் இனி பல பயன்பாடுகள் மாறாமல் ஒரே செயலி மூலமாக தங்களது பயணங்களை எளிதாக முன்பதிவு செய்யலாம். இது பயண அனுபவத்தை மேலும் சீரானதும், வசதியானதுமாக ஆக்கும்,” என அவர் கூறினார்.

பயனர்கள் இனி ரேபிட் On-Demand பயன்பாட்டை மட்டும் பயன்படுத்தலாம், இது Google Play Store மற்றும் Apple App Store-ல் இலவசமாக கிடைக்கிறது என்று அவர் கூறினார். மேலும் தகவல்களுக்கு, சேவைப்பகுதி வரைபடங்கள், பயன்பாட்டு வழிகாட்டி, மற்றும் Rapid பாஸ்கள் தொடர்பான விவரங்களுக்கு ரேபிட் கேஎல்லின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் அல்லது www.myrapid.com.my இணையதளத்தைப் பார்வையிடலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.