கோலாலம்பூர், நவம்பர் 10 — 2025/2026 வடகிழக்கு பருவமழை இந்த வியாழக்கிழமை தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐந்து முதல் ஏழு தொடர்ச்சியாக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சில நாட்கள் தொடர்ச்சியாக கனமழை பெய்யும் போது, குறிப்பாக ஆறுகள் அருகில் மற்றும் தாழ்வான நிலப்பரப்புகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று மலேசிய வானிலை துறையான மெட்மலேசியாவின் இயக்குநர் பொறுப்பாளர் மோஹ்ட் ஹிஷாம் மோஹ்ட் அனிப் கூறினார் .
"இந்த காலகட்டத்தில் வலுவான மற்றும் தொடர்ச்சியான வடகிழக்கு காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பும் தென் சீனக் கடலில் கடல் மட்டம் உயரும் அபாயமும் அதிகரிக்கக்கூடும்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களுக்கு, பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய கனமழை எச்சரிக்கை மற்றும் தயாராக இருக்க மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம், myCuaca செயலி, வானிலை துறையின் சமூக ஊடகங்கள் மூலம் வானிலை புதுப்பிப்புகள், முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.




