அலோர் ஸ்டார், நவ 10- கெடா மாநிலஅரசாங்கம் தனது அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொருவருக்கும் RM2,000 சிறப்பு 'போனஸ்' தொகையை அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு தவணைகளாகச் செலுத்த அறிவித்துள்ளது.
இந்தச் சிறப்பு நிதி உதவிக்காக RM10 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஶ்ரீ முஹம்மத் சனுசி எம்டி நூர் தெரிவித்தார்.
"மாநில நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கெடா அரசு ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில், இந்த மாநிலத்தைச் சேர்ந்த 5,000 அரசு ஊழியர்கள் இந்தச் சிறப்பு நிதி உதவியைப் பெறுவார்கள்.
இது பள்ளி திறக்கும் போது ஜனவரியிலும், நோன்புப் பெருநாளை (Hari Raya Aidilfitri) கொண்டாடுவதற்காக மார்ச் மாதத்திலும் என இரண்டு முறை செலுத்தப்படும்," என்று விஸ்மா தாருல் அமான் நகரில் நடைபெற்ற மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் கெடா 2026 பட்ஜெட்டைச் சமர்ப்பித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில், "கெடா செஜஹ்தேரா நிக்மட் உண்டுக் செமுவா" (Kedah Sejahtera Nikmat Untuk Semua) என்ற முழக்கத்துடன் RM1.33 பில்லியன் தொகையிலான கெடா 2026 பட்ஜெட்டை முஹம்மத் சனுசி சமர்ப்பித்தார்.,000 அரசு ஊழியர்கள் இந்தச் சிறப்பு நிதி உதவியைப் பெறுவார்கள்.




