ஈப்போ, நவ 10- மலேசிய இந்தியர்களுக்கான சிறப்புக் கல்வி மற்றும் நிதி விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்குடன், மித்ரா பங்கு பரிவர்த்தனை விழா 2025 பேராக் மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி, காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை, ஈப்போ நகர மண்டபத்தில் (Ipoh Town Hall) நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்தியர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
நிதியியல் மற்றும் முதலீட்டுத் துறையில் உள்ள நிபுணர்களிடமிருந்து விளக்கங்கள்,மடாணி அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்த தகவல்கள் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்களின் அறிவிப்புகள் போன்றவை இதில் இடம்பெறும்.
மேலும், இலவச CDS கணக்கு தொடக்கம் (பங்குச் சந்தை முதலீட்டுக் கணக்கு), முதல் 500 பங்கேற்பாளர்களுக்கு உணவு வவுச்சர்கள், மருதாணி இடுதல், பாட்டிக் ஓவியம் போன்ற பொழுதுபோக்குச் செயல்பாடுகள் மற்றும் RM20,000 வரையிலான அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகள் போன்ற பல அம்சங்கள் பார்வையாளர்களைக் கவரும்.
இந்த நிகழ்ச்சியின் பதிவும் அனைத்துச் செயல்பாடுகளும் இந்திய சமூகத்தினருக்கு முற்றிலும் இலவசம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




