ஷா ஆலம், நவம்பர் 10- கடந்த மாதம் தன் மைத்துனர் தலையை வெட்டிக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை இன்று கெடா மாநில ஜித்ரா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம்சாட்டப்பட்டவர் மீது வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை தாம் புரிந்துகொண்டதாகத் தலை அசைத்தார். வழக்கு மஜிஸ்திரேட் நோர் சய்லியாத்தி மொஹ்ட் சோப்ரி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது என பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் வழக்கை மீண்டும் ஜனவரி 12 அன்று விசாரணைக்கு கொண்டு வரவும் ஆவணங்களை ஒப்படைக்கவும் தீர்மானித்துள்ளது.
நிகழ்விடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் இருந்த தனது வீட்டில் இருந்த குற்றம்சாட்டப்பட்டவர், கையில் பராங்க் பிடித்திருந்தபடியே 15 நிமிடங்கள் பேசி சமாதானப்படுத்தப்பட்ட பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் எடுக்காதது உறுதிப்படுத்தப்பட்டது. அவரது குடும்பத்தினர் அவரின் மனநிலை சீர்குலைந்துள்ளதாக தெரிவித்தனர்.




