ஷா ஆலம், நவ 10: ``Projek Mesra Rakyat 2025`` திட்டம் மூலம் பண்டார் பாரு பாங்கி, செக்ஷன் 7, ஶ்ரீ அங்கேரிக் குடியிருப்பு வசிப்பிடத்தை பழுதுபார்க்க RM30,000 நிதியை பாங்கி நாடாளுமன்றம் ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்தில் சிசிடிவி கேமரா நிறுவல் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள விளையாட்டு பூங்கா சாதனங்களின் பழுதுப்பார்ப்பு போன்றவை அடங்கும் என பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹான் கூறினார்.
“இந்த நடவடிக்கைகள் உள்ளூர் குடியிருப்பினருக்கு பயனளிக்கும் என நம்புகிறேன். மேலும், அனைவரும் வசதிகளை பராமரித்து, சமூக சூழல் எப்போதும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்,” என்று அவர் குடியிருப்பை பார்வையிட்ட போது ஷாரெட்ஸான் கூறினார்.
“இந்த மாதிரியான திட்டங்கள் உறவுமுறை உணர்வை வளர்க்கவும், நகர மக்கள் வாழ்வாதார தரத்தை மேம்படுத்தவும் முக்கியமானவை” என்று அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, இந்த ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் பல சிறிய திட்டங்கள் மற்றும் பொது கட்டமைப்புகளுக்கு RM67 மில்லியனை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒதுக்கியுள்ளார்.
இந்த திட்டங்கள் ஐந்து ஆண்டு வளர்ச்சி திட்டத்தை (RMLT) நிறைவேற்றுவதற்கும், மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களின் மூலம் அரசாங்கத்தின் நற்பெயரை உயர்த்துவதற்கும் உதவுகிறது.




