கோத்தா கினாபாலு, நவ 10- மலேசிய எஃப் ஏ கிண்ண காற்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், எஃப் ஏ கிண்ண போட்டியின் அரையிறுதி சுற்றின் முதல் ஆட்டம் நேற்றிரவு கோத்தா கினாபாலுவில் நடைபெற்றது.
இதில் சபா அணியுடன் சிலாங்கூர் எஃப் சி அணி மோதிய நிலையில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.
சபா அணியின் முதல் கோலை அஜ்டின் முஜாகிச் புகுத்திய நிலையில் சிலாங்கூர் அணி ஆட்டத்தை சமநிலைப்படுத்தியது.
பிறகு சிலாங்கூர் எஃப் சி அணி இரண்டாவது கோலை புகுத்தி முன்னிலைப்படுத்திய வேளையில் சபா அணி இறுதி நிமிடத்தில் ஆட்டத்தை சமநிலைப்படுத்தியது.
சபா அணிக்கான சமநிலை கோலை அஜ்டின் முஜகிச் புகுத்தினார். எதிர்வரும் 30ஆம் தேதி நவம்பர் மாதம் இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வாட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் MBPJ அரங்கில் நடைபெறவுள்ளது.




