மென்செஸ்டர், நவ 10- இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான லிவர்புல் அணி, மென்செஸ்டர் சிட்டி அணியுடன் மோதியது.
இவ்வாட்டம் இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் பரபரப்பாக தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் இரு அணிகளும் கோல் புகுத்தும் வேட்கையில் களமிறங்கினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றிக் கோல்களை எர்ரிங் ஹாலண்ட், நிகோ கொண்சாலஸ், ஜெராமி டோகு ஆகியோர் அடித்தனர்.
இந்த ஆட்டத்தின் வெற்றியால் மென்செஸ்டர் சிட்டி அணி 22 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
புள்ளிப் பட்டியலில் அர்சனல் அணி 26 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை 11 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




