ad

முதலீட்டு துறையை வலுப்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு தேவை

10 நவம்பர் 2025, 2:45 AM
முதலீட்டு துறையை வலுப்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு தேவை

கோலாலம்பூர், நவ 10: சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாட்டை (SIBS) வெளிநாடுகளில் விரிவுபடுத்துவது உட்பட முதலீட்டு துறையை மேலும் வலுப்படுத்த எதிர்வரும் ஆண்டில் அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது.

இந்த ஒதுக்கீடு சிலாங்கூரை தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) நுழைவாயிலாக வலுப்படுத்துவதோடு, குறைக்கடத்தி (semiconductor) மற்றும் விண்வெளி (aerospace) போன்ற முக்கிய துறைகளையும் முன்னிலைப்படுத்த உதவும் என முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

“சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாட்டை சிலாங்கூர் அல்லது கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் மட்டும் நடத்துவது போதுமானதல்ல. அதை வெளிநாடுகளிலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. இதற்கான சிறந்த திட்டம் தற்போது ஆராயப்பட்டு வருகிறது.”

“அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீடு, பிற துறைகளை மேம்படுத்தவும், அவற்றை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் அறிமுகப்படுத்தவும் பயன்படுத்தப்படும். இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மிகவும் முக்கியமானது,” என அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

அடுத்தாண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட் நவம்பர் 14ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் சமர்ப்பிக்கப்படும்.

கடந்த வாரம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டின் இறுதி உள்ளடக்கத்தைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அது மக்களுக்கு நேரடி பலன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அமிருடின் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு சார்ந்த புதிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் நோக்கம், மக்களை மாநிலத்தின் வளர்ச்சியுடன் இணைந்த முறையில் முன்னேற்றுவது ஆகும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.