கோத்தா கினபாலு, நவ 10- கம்போங் ஜாவா லோட் 11113 மக்கள் வீடுகளைக் காலி செய்ய கூடுதல அவகாசம் வழங்க மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
லோட் 11113 கம்போங் ஜாவாவில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 3ஆம் தேதி தொடங்கி 7 நாள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்மார்ட்சேவா வீடுகளுக்கு செல்ல சில குடியிருப்பாளர்கள் மாநில அரசால் உதவி பெற்றுள்ளனர்.இதனால் அவர்களுக்கான காலக்கெடு இந்த மாத இறுதி வரை கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டி அவர்களில் பலர் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
அவர்கள் மூத்த குடிமக்கள் என்பதால், அவர்களுக்கு இடம் மாற கால அவகாசம் கேட்டுள்ளதாக குணராஜ் ஜோர்ஜ் தெளிவுப்படுத்தினார்.
''இதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரருடின் ஷாரியிடம் கோரிக்கையை முன்வைத்தேன்''என்று அவர் கூறினார்.
இந்நிலையில், குடியிருப்பாளர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்ற வேண்டியிருப்பதால், கால அவகாச நீட்டிப்பை அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
சிலாங்கூர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு எனது மிகுந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய முடிவை எடுப்பார் என்று தாம் நம்புவதாக குணராஜ் ஜோர்ஜ் முகநூல் வாயிலாக தெரிவித்து கொண்டார்




