ஈப்போ, நவ.9: பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் இன்று " டத்தோ" விருது கிடைக்கப் பெற்றார். இந்நிகழ்வு கோல கங்சார் அரண்மனையில் காலையில் சிறப்பாக நடந்தேறியது. பேராக் ஜசெக வில் இரண்டாவது பிரமுகராக டத்தோ விருது கிடைக்கப் பெற்றவர் டத்தோ அ.சிவநேசன் என்றால் மிகையாகாது.
இதற்கு முன்னதாக பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாம் டத்தோ விருது கிடைக்கப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.பேராக் மாநில இந்திய சமூக நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினரான இவருக்கு டத்தோ விருது கிடைக்கப் பெற்றது, இம்மாநில இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. இதன் வழி அவர் மீண்டும் தன் முனைப்போடு செயல்படுவார் என்று பெரிதும் நம்பப் படுகிறது




