கோலாலம்பூர், நவ 9- தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் பதவியை இவான் பெனடிக் நேற்றிரவு ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
முன்னதாக பெனாம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் புத்ராஜெயாவில் தனது அமைச்சின் ஊழியர்கள் ஏற்பாடு செய்த பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டார்.
மேலும் நவம்பர் 11 முதல் 29 வரை இவான் விடுப்பில் செல்வதாக அறிவித்தார்.ஆனால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனது ராஜினாமாவைத் தெரிவிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஒரு கடிதம் அனுப்பியதாக இவோன் கூறினார்.
இதனிடையே மலேசியா ஒப்பந்தம் 1963 (எம்ஏ63) இன் கீழ் சபாவின் 40 சதவீத வருவாய் உரிமைகள் தொடர்பான பிரச்சினையில் ஏஜிசியின் நிலைப்பாட்டை ஏற்காததால், இவோன் பெனடிக் தனது அமைச்சரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.




