ad

தொகுதியில் மேம்பாடு உச்சத்தை எட்டிவிட்டது; பசுமை நகர திட்டங்களுக்கு முன்னுரிமை தேவை: வொங் சியூ கீ

8 நவம்பர் 2025, 9:48 AM
தொகுதியில் மேம்பாடு உச்சத்தை எட்டிவிட்டது; பசுமை நகர திட்டங்களுக்கு முன்னுரிமை தேவை: வொங் சியூ கீ
தொகுதியில் மேம்பாடு உச்சத்தை எட்டிவிட்டது; பசுமை நகர திட்டங்களுக்கு முன்னுரிமை தேவை: வொங் சியூ கீ
ஷா ஆலம், நவம்பர் 8 — ஸ்ரீ கெம்பாங்கான் மாநில சட்டமன்ற தொகுதி தற்போது அதன் மேம்பாட்டு அளவின் உச்சத்தை எட்டியுள்ளது டன், பயன்படுத்தப்படாத நிலம் மற்றும் காடுகள் சுமார் 20 முதல் 30 சதவீதம் மட்டுமே மீதமிருக்கின்றன என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வொங் சியூ கீ தெரிவித்துள்ளார்.
அவர், மக்களின் எதிர்கால நலனை முன்னிலைப்படுத்தி, நீடித்த மற்றும் சுற்றுச்சூழல் நட்பு மேம்பாட்டு திட்டங்களை மாநில அரசும் உள்ளூர் சபைகளும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
“நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் மிக மேம்பட்ட மாநிலமான சிலாங்கூரில் மக்கள் அடர்த்தி மிக அதிகம், மேலும் மேம்பாட்டு தேவைகளும் பெரியது. ஆனால் இந்த அதிவேக வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தொகுதியின் ஒரே மேம்படுத்தப் படாத பகுதி மாஜு நெடுஞ்சாலை (MEX) வழியாக உள்ள புக்கிட் செர்டாங் காட்டுப் பகுதி மட்டுமே ஆகும்.

“அனுமானத்தின் அடிப்படையில், எனது தொகுதியில் நிலத்தின் சுமார் 70 முதல் 80 சதவீதம் வரை ஏற்கனவே மேம் படுத்தப் பட்டுள்ளது. இந்த அதிவேக வளர்ச்சியின் தாக்கம் இப்போது மேலும் தெளிவாகத் தெரிகிறது — குறிப்பாக அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளம் மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது,” என்றார்.

வொங், தேசிய, மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் அனைத்தும் எதிர் கால வளர்ச்சி சவால்களுக்கு முன்கூட்டியே தயாராகி, நீடித்த அணுகுமுறைகள பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“எதிர்கால மேம்பாட்டு திட்டங்களில், நவீன பசுமை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ஸ்பாஞ்ச் சிட்டி’ (sponge city) கொள்கையைச் சேர்க்க வேண்டும். இது சுற்றுச்சூழல் அமைப்பின் பாதிப்பை குறைக்கும்,” என்று அவர் கூறினார்.

ஸ்பாஞ்ச் சிட்டி கொள்கையின் நோக்கம் மழை நீரை உறிஞ்சி, வடிகட்டி சேமிக்கக் கூடிய பகுதிகளை பராமரிப்பதன் மூலம் வெள்ள அபாயத்தை குறைத்து, நகரப் பசுமை அமைப்பை பாதுகாப்பதாகும்.

இந்த வகையான நீடித்த நகர மேம்பாட்டு அணுகுமுறை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மேம்பாடு காலத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் போட்டியாக இருப்பதால் அது ஒருபோதும் நிற்காது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்ற பசுமை நகர மாடல்கள் ஆராயப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

அதே நேரத்தில், ஒன்-ஸ்டாப் சென்டர் (OSC) அதிகாரிகள், திட்ட அனுமதிகளில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அம்சங்கள் சேர்க்கப் படுவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வொங் தெரிவித்தார்.

“திட்ட அனுமதிகளுக்கான கூடுதல் நிபந்தனைகள் இன்னும் பாரம்பரியமா- னவையாக உள்ளன — உதாரணமாக பள்ளிக்குத் திடல் ஒதுக்குதல் அல்லது அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
இப்போது, பசுமை மற்றும் நீடித்த நகர மேம்பாட்டு அம்சங்களையும் கட்டாய நிபந்தனைகளாக சேர்க்க வேண்டும்,” என்றார்.

2026 சிலாங்கூர் பட்ஜெட் நவம்பர் 14 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இது நிதி தாங்கும் தன்மை, மனித மூலதன மேம்பாடு மற்றும் மலேசியாவின் முக்கிய பொருளாதார சக்தியாக மாநிலத்தின் நிலையை வலுப்படுத்தலையும் மையமாகக் கொண்டுள்ளது.

முன்னதாக, மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த பட்ஜெட் முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) நிறைவுடனும், அடுத்த ஆண்டில் முன்வைக்கப்படும் RS-2 திட்டத்திற்கான அடித்தளத்தையும் அமைக்கும் இடைப்பட்ட பட்ஜெட்டாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.