ஷா ஆலம், நவம்பர் 8 — கோலாலம்பூரில் சுங்கை பீசி டேசா தாசிக் விளையாட்டு நீச்சல் குளத்தில் நடைபெற்ற நீர்நம்பிக்கை மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, சிறப்பு கல்வி ஒருங்கிணைப்பு திட்ட (PKKI) மாணவன் ஒருவர் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
கோலாலம்பூரிலுள்ள ஒரு தேசியப் பள்ளியில் பயிலும் 11 வயது மாணவன், சம்பவத்திற்குப் பிறகு துவாங்கு முகிரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்றபோதும், நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் உயிரிழந்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்ததார்.
மேலும் “மரணமடைந்த மாணவனின் உடல் மலாக்கா சுங்கை ஊடாங் ஷுஹாதா இஸ்லாமிய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒரு புகாரைப் பெற்றுள்ளனர் மற்றும் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.




