ஷா ஆலம், நவம்பர் 8: நேற்று இரவு ஏற்பட்ட புயலால் குவாந்தான் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன், 13 மரங்கள் கவிழ்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட புயல் தாமான் தானா பூத்தே , புக்கிட் செதொங்கோல் மற்றும் தாமான் செந்தரவாசி பகுதிகளை பாதித்தது என்று குவாந்தான் குடிமக்கள் பாதுகாப்புத் துறை (APM) அதிகாரி மேஜர் ஜஹிதி சைனுதின் தெரிவித்துள்ளார்.
“இன்று காலை 10 மணி நிலவரப்படி, தாமான் தானா பூத்தே பகுதியில் 40 வீடுகள் மற்றும் புக்கிட் செதொங்கோல், தாமன் செந்தரவாசி பகுதிகளில் மேலும் 20 வீடுகள் சேதமடைந்ததாக அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.“சேதமடைந்த வீடுகளின் மொத்த எண்ணிக்கையும், நஷ்டத்தின் மதிப்பீடும் இன்னும் கணக்கெடுப்பு நிலையிலேயே உள்ளது,” என்று அவர் கூறினார்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.




