ஷா ஆலாம், நவ 7- 2026ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி, மாநில மந்திரி புசாரால் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த தகவலை சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் கூறினார்.
மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்த பின் நவம்பர் 17 முதல் 21 வரை மற்றும் நவம்பர் 24 முதல் 27ஆம் தேதிவரை படஜெட் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவு திட்டத்தின் நேரலையை பொதுமக்கள் மீடியா சிலாங்கூர் அகப்பக்கம் மூலம் காணலாம்.




