ஷா ஆலம், நவ 7 — இன்று கித்தா சிலாங்கூர் இலவச ஆம்புலன்ஸ் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இந்த சேவை பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளுக்கு (DUN) பயனளிக்கும்.
இதில் கிள்ளான் பகுதி முதன்மையாக இருக்கும், அங்கு 26 ஆம்புலன்ஸ்களின் சேவை வழங்கப்படுப்படும். இதில் 1 நியோநேட்டல் ஆம்புலன்ஸ் மற்றும் 2 பாரியாக்ட்ரிக் ஆம்புலன்ஸ்களும் (உடல் பருமன் நோயாளிகளுக்கு) அடங்கும்.
இந்த சேவை சுங்கை பூரோங், ஈஜோக், ஜெராம், ஶ்ரீ கெம்பாங்கான், கோத்தா அங்கிரிக், பத்து தீகா, புக்கிட் காசிங், சுங்கை பிலேக் உள்ளிட்ட பகுதிகளையும் உள்ளடக்கியது
இத்திட்டம் 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. உள்ளூர் ஊராட்சி மன்றங்கள் (PBT) மற்றும் மலேசியா சுகாதார அமைச்சகம் (KKM) இணைந்து ஒரு வருட ஆய்வுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்டது என சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த சேவைக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள சமூக சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் St John Ambulans Malaysia (SJAM) Selangor முக்கிய பங்களிக்கிறது.
இந்த சேலையின் மொத்த செலவான RM1 மில்லியன், ``Tabung Selangor Bangkit`` மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.





