கோலாலம்பூர், நவம்பர் 7 — உலகப் பூப்பந்தாட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் தேசிய ஜோடியான பியெர்லி தான் - எம். தீனா தங்களின் சிறப்பான ஆட்டத்தால் உலக தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் இந்த சீசனில் தொடர்ந்து பிரமிக்கவைக்கும் வெற்றிகளைப் பதிவு செய்ததன் பலனாக, சீன வீராங்கனைகள் லியு ஷெங் ஷு - டான் நிங்கை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளனர்.
தற்போது பியெர்லி-தீனா ஜோடி 104,860 புள்ளிகளைப் பெற்றுள்ளனர், இதேசமயம் பிரான்ஸ் ஹைலோ போட்டியில் கலந்து கொள்ளாததால் சீன ஜோடி 103,150 புள்ளிகளுடன் பின்னடைந்துள்ளது. உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டி வருகின்ற டிசம்பர் 17 முதல் 21 வரை ஹாங்சோவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு தகுதி பெறும் முதல் எட்டு ஜோடிகளை உலக தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.
இந்த வெற்றியால் பியெர்லி-தீனா ஜோடி சீன வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி உலக தரவரிசையில் பெருமைக்குரிய முதலிடத்தைப் பெற்று மலேசியாவுக்கு பெறுமை செர்த்துள்ளனர்.




