ad

கிரிக் சாலை விபத்து: அனுமதி நிபந்தனையை மீறிய பேருந்து நிறுவனத்திற்கு RM20,000 அபராதம்

7 நவம்பர் 2025, 4:46 AM
கிரிக் சாலை விபத்து: அனுமதி நிபந்தனையை மீறிய பேருந்து நிறுவனத்திற்கு RM20,000 அபராதம்

கோலாலம்பூர், நவம்பர் 7 — Kenari Utara Travel & Tours Sdn. Bhd. என்ற பேருந்து நிறுவனத்தின் சுற்றுலா பேருந்து ஒன்றை Noreen Maju Trading என்ற அனுமதியில்லா சுற்றுலா நிறுவனம் ஒன்றிற்கு விற்றதற்கும், அதே நிறுவனத்திற்கே அந்த பேருந்தின் அனுமதிப் பத்திரத்தை வாடகைக்கு கொடுத்ததற்கும், RM20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த பேருந்து, சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் மாணவர்களை தஞ்சோங் மாலிம் வளாகத்துக்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது, கடந்த ஜூன் 9 ஆம் தேதி பேரா மாநிலம் கிரிக் பகுதியில் விபத்தில் ஈடுபட்டது.

கிரிக் மேஜிஸ்டிரேட் நீதிமன்றம், நவம்பர் 3 அன்று, அந்த நிறுவனத்தை இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றவாளி என நிரூபித்து, ஒவ்வொரு குற்றத்திற்கும் RM10,000 அபராதம் விதித்தது. அபராதத்தை செலுத்த தவறினால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

MOTAC வெளியிட்ட அறிக்கையில், 482 விதிமுறை மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளை மீறுவது ஒரு கடுமையான குற்றம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா துறையின் பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் குலைக்கும் எந்த தரப்புக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க MOTAC உறுதியாக உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 9 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் திரங்கானு மாநிலத்தின் ஜெர்திஹவிலிருந்து தஞ்சோங் மாலிம் வளாகத்துக்கு பயணித்த UPSI மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு பேருந்து, கிரிக் சாலையில் விபத்துக்குள்ளாகி, 15 மாணவர்கள் உயிரிழந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.