ஈப்போ, நவ 7- பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன், டத்தோ பட்டத்தை எதிர்வரும் ஞாயிற்றுகிழமை பெறுகிறார்.
பேராக் மாநிலத்தின் சுகாதாரம், மனிதவளம், ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுத்துறைக்குத் திறம்பட சேவையாற்றியதற்காக D.P.M.P எனப்படும் டத்தோ பட்டம் பெறவுள்ளார்.
இந்த டத்தோ விருதைப் பேராக் மாநில ஆட்சியாளர், மேன்மை தங்கிய சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா அவர்கள் இந்த விருதை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
இந்த நிகழ்வு வார இறுதியில் பேராக் மாநிலத்தின் கோல கங்சார், இஸ்கண்டாரியா அரண்மனையில் நடைபெறவுள்ளது.




