சுபாங் ஜெயா, நவம்பர் 7 — Pelaburan Hartanah Berhad (PHB) நிறுவனம் சமூக வளர்ச்சியும் கல்வி முன்னேற்றத்திற்கும் தன்னுடைய அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சுபாங் பெர்டானா பகுதியில் தேசிய வகை ஜாலான் U3 பள்ளியின் 35 வகுப்பறைக்கு தளவாட பொருட்கள் வழங்கியது. இந்த உதவி 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயனளிக்க உள்ளது.
இந்த முயற்சி PHB நிறுவனத்தின் ‘The Good Builder’ என்ற சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ், Epic Homes அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட PHB ஊழியர்கள் தன்னார்வலர்களாக பங்கேற்று, பள்ளி வகுப்பறைகளுக்காக மேசை, நாற்காலி மற்றும் அலமாரி போன்றவை வழங்கினர்.
இந்த திட்டம் கல்வியையும் உள்ளூர் சமூகங்களையும் மேம்படுத்தும் நீண்டகால அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று அதன் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான மொஹமட் தம்ஷால் அவாங் தமித் தெரிவித்தார்.
இந்த முயற்சி ஐக்கிய நாடுகள் சபையின் திடத்தன்மை வளர்ச்சி இலக்கு தரமான கல்வி என்ற நோக்கத்துடன் இணங்குவதாகும். இது மாணவர்கள் கவனமாகவும் வசதியாகவும் கற்கக்கூடிய கல்விச் சூழலை உருவாக்க வேண்டியதைக் குறிப்பிடுகிறது என்றார்.
தன்னார்வலர்களுக்கு கருவிகளை சரியாக பயன்படுத்துவது, துல்லியமான அளவீடு களை எடுப்பது, மற்றும் ஒவ்வொரு மேசை, நாற்காலி, அலமாரியும் வலுவானதும் நீடித்ததும் ஆக இருப்பதை உறுதிப்படுத்துவது குறித்து நாம் வழிகாட்டுவோம்,” என அவர் கூறினார்.




