கோலாலம்பூர், நவ 7 - காப்புறுதி மற்றும் தகாஃபுல் தொழில்துறையுடன் இணைந்து பேங்க் நெகாரா தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொண்டதில் இருந்து, மருத்துவம் மற்றும் சுகாதாரக் காப்புறுதி கட்டண சீரமைப்பு தொடர்பாக 190 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
அந்த எண்ணிக்கையில், 94 விழுக்காடு அல்லது 179 புகார்களை காப்புறுதி மற்றும் தகாஃபுல் நிறுவனங்கள் தீர்த்து வைத்துள்ளதோடு, எஞ்சியவை இன்னும் விசாரணையில் உள்ளதாக நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
அந்த தற்காலிக நடவடிக்கையின் வழி, இலக்கிடப்பட்டதைக் காட்டிலும் அதிகமான பலன் கிடைத்துள்ள வேளையில், 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட காப்புறுதி உரிமையாளர்கள், அசல் 80 விழுக்காட்டு உயர்வைக் காட்டிலும், 10 விழுக்காட்டிம் குறைவான கட்டண அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளதை லிம் ஹுய் யிங் சுட்டிக்காட்டினார்.
"தற்காலிக நடவடிக்கைகளை இத்திட்டம் முழுமையாகப் பின்பற்றவில்லை என்றால், ஐ.டி.ஓ எந்தவொரு கட்டண சீரமைப்பையும் செயல்படுத்த பேங்க் நெகாரா மலேசியா அனுமதிக்காது.
இந்த மூன்று ஆண்டுகள் தற்காலிக நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும். நிர்ணயிக்கப்பட்ட (நடவடிக்கைகளை) பின்பற்றத் தவறும் ஐ.டி.ஓ தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்," என்றார் நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
இன்று, மக்களவையில், பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ட்ஸெ ஜின் எழுப்பியக் கேள்விக்கு லிம் இவ்வாறு பதிலளித்தார்.
பெர்னாமா




