புத்ராஜெயா, நவ 6 - மீள்தன்மை மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கி கல்வியைக் கொண்டு செல்லும் முயற்சியாக, 2025 Festival Idea Putrajaya கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
மீள்தன்மை என்பது மீள்வதற்கான திறன் மட்டுமல்ல மாறாக நெருக்கடியில் எதிர்பார்ப்பை மாற்றியமைத்து கொள்வது மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகிய பண்புகளும் அதில் அடங்கும்.
எனவே, விமர்சன சிந்தனை மற்றும் புதுமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் கல்வி மூலம் இதை வளர்க்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"இத்திறனை கல்வி வளர்க்கிறது. இது விமர்சன சிந்தனையாளர்களை உருவாக்குவதுடன், மக்களிடையே புத்தாக்கத்தையும் வளர்க்கின்றது.
கல்வியின் மூலமே அறிவுத்திறனையும் நேர்மையையும் நாம் வளர்த்து கொள்கிறோம். அவை நீடித்த வலிமையின் இரட்டைத் தூண்கள்," என்றார் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் கூறினார்.
அக்கண்காட்சியின் இரண்டாவது நாளில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு விளக்கினார்.
பெர்னாமா




