கோத்தா கினாபாலு, நவ 6- சபா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர்களை DAP சனிக்கிழமை அன்று கோத்தா கினபாலுவில் அறிவிக்கவுள்ளது.
கட்சியின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டே சபா மக்கள் மதிப்பிடுவார்கள் என்று சபா டி.ஏ.பி.யின் துணைத் தலைவர் சான் ஃபூங் ஹின் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஃபிராங்கி பூன் வெளியேறிய போதிலும், சண்டக்கான் பகுதியில் டி.ஏ.பி.யின் பலம் குறையவில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
2020ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற DAP-இன் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னர் வாரிசானுக்குத் தாவியிருந்தனர். இதற்கிடையில், DAP அங்கம் வகிக்கும் பக்காத்தான் ஹாரப்பான் , ஆளும் கூட்டணியான கபூங்கான் ரக்யாட் சபா மற்றும் பாரிசான் நேஷனல் (BN) ஆகியவற்றுடன் தேர்தல் உடன்படிக்கைகளை எட்டியுள்ளது.
பி.கே.ஆர். கட்சி தனது வேட்பாளர்களை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ளது. ஜி.ஆர்.எஸ். தலைவர் ஹாஜிஜி நூர், சில இடங்களில் பி.எச். கூட்டணியுடன் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.




