சைபர்ஜெயா, நவ 6- முதுகு வலியால் அவதியுற்றிருந்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தாம் தற்போது நலமுடன் இருப்பதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் கூறினார்.
"I AM GOOD" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், ஐ.சி டிசைன் பார்க் 2 தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்குச் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி, வீடமைப்பு, ஊராட்சி துறையின் துணையமைச்சர் டத்தோ அய்மான் அத்திரா சபு ஆகியோர் பிரதமருடன் உடன் வந்தனர்.
முன்னதாக, பிரதமர் அன்வாருக்கு முதுகில் வலி ஏற்பட்டதால் அவர் ஓய்வில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் அவர் பகாங் மாநிலத்திற்கான அலுவல் பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




