கோலாலம்பூர், நவம்பர் 6 — மலேசியப் பாஸ்போர்ட் தற்போது உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என 2025ஆம் ஆண்டுக்கான பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை மலேசியப் பாஸ்போர்டின் உயர் பாதுகாப்பு அம்சங்களுக்கான சர்வதேச நம்பிக்கை மற்றும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது என்று மலேசிய குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.
“மலேசியப் பாஸ்போர்ட் வைத்திருப்போர் உலகளவில் 174 நாடுகளுக்குத் விசா இல்லாமல் பயணம் செய்யும் சலுகையை அனுபவிக்கிறார்கள்,” என்று மலேசிய குடிநுழைவு துறை தனது சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளது.
மேலும் பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசை வெளியிட்ட அறிக்கையில் தரவின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் இரண்டாம் இடங்களில் உள்ளன.
மலேசியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து, இத்தாலி, டென்மார்க், போர்த்துகல், சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஆஸ்திரியா, நார்வே, அயர்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய 15 நாடுகளுடன் இணைந்து மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.




