ஷா ஆலம், நவ 6: நேற்று மாலை போர்னியோ பகுதியில் 6.37 மணியளவில் 4.8 ரிக்டர் அளவிலான வலுவற்ற நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
அந்த நிலநடுக்கத்தின் மையம் வடக்கு 2.7° மற்றும் கிழக்கு 116.6° என்ற இடத்தில், சபா மாநிலத்தின் சபுலுட் நகரத்திலிருந்து சுமார் 227 கிலோமீட்டர் தெற்கில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.
இந்த அதிர்வை சபா மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் உணரப்பட்டிருக்கலாம். ஆனால், இதுவரை சுனாமி அபாயம் எதுவும் இல்லை என மெட்மலேசியா தெரிவித்தது.
அத்துடன், இத்துறை தற்போதைய நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.




