ஈப்போ, நவம்பர் 6 — பத்து குராவ் அருகே உள்ள லதா தெலகா 7 பகுதியில், தோட்டம் அருகே உள்ள ஆற்றில் ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் 3.05 மணிக்கு சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு வந்ததாகவும், பத்து குராவ் தீயணைப்பு நிலையத்திலிருந்து (BBP) ஒரு குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) செயல் அதிகாரி ஷாஸ்லீன் முகமது ஹனாஃபியா கூறினார்.
சுமார் 50 வயது மதிக்கத்தக்கதாக நம்பப்படும் அந்த ஆணின் உடலை ஆற்றிலிருந்து மீட்க JBPM குழுவின் உதவியை கோரியதாக அவர் கூறினார். மலைப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவர் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
விசாரணை முடிந்த பிறகு, உடல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.




