ad

அதிக வருமானம் கொண்ட சிலாங்கூர் ஊழலுக்கு ஆளாகக்கூடும் என்று MACC எச்சரிக்கை

5 நவம்பர் 2025, 9:47 AM
அதிக வருமானம் கொண்ட சிலாங்கூர் ஊழலுக்கு ஆளாகக்கூடும் என்று MACC எச்சரிக்கை

ஷா ஆலம், நவம்பர் 5 — அதிக வருமானம் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் இருப்பதால், அது ஊழலுக்கு ஆளாகக்கூடியது என்று மலேசியா ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (MACC) சமூகக் கல்வி இயக்குநர் டத்தோ அகமது நிஜாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

மாநில மக்கள் நலனுக்காக பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதும் இதற்குக் காரணமாகும். பல உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்வதால், ஊழல் சம்பவங்கள் எளிதில் வெளிப்படையாகிறது. அதனால், ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் அரச மலேசிய காவல் துறை மட்டுமல்லாமல், அடிப்படை நிலை மக்களும் ஊழலை ஒழிக்கும் பணியில் பங்கு பெறுவது மிக முக்கியம்,” என அவர் இன்று ஷா ஆலம் தேசிய நேர்மையியல் உரையாடல் (DIKSA) நிகழ்வில் தெரிவித்தார்.

“Us and City of Integrity” என்ற தலைப்பில், ஷா ஆலம் மாநகர சபை மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இத்தகைய உரையாடல் அனைத்து உள்ளூராட்சி சபைகளாலும் முன்னுதாரணமாக நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். ஊழல் இல்லா இலக்கை ஒவ்வொரு அமைப்பிலும் குறிப்பாக பள்ளிகள், பள்ளிவாசல்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களில் அமல்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.