ஷா ஆலம், நவம்பர் 5 - சிலாங்கூர் அரசு எந்தவித ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் சம்பந்தமான தவறுகளுக்கும் சமரசம் செய்யாது, ஏனெனில் அது மாநிலத்தின் மதிப்பும் நிர்வாகத்தின் நம்பிக்கையும் பாதிக்கக்கூடும் என்று மாநில அரசின் செயலாளர் டத்தோ டாக்டர் அஹ்மட் ஃபட்ஸ்லி அஹ்மட் தாஜுடின் தெரிவித்தார்.
மாநில அரசு பெறும் ஒவ்வொரு புகாரும், குறிப்பாக உள்ளூராட்சி அமைப்புகள் (PBT) தொடர்பானவையும், முழுமையாக விசாரிக்கப்படும். சில புகார்கள் ஆதாரமற்றவை, சிலவை அதிருப்தியால் எழுப்பப்பட்டவை, மேலும் சில அமைப்பில் உள்ள பலவீனத்தினால் ஏற்படும் என்றார் அவர்.
ஆனால் ஒவ்வொரு புகாரும் ஆராய்ந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதே சமயம், அனைத்து அரசுப் பணியாளர்களும் தங்கள் நடத்தை குறித்து எச்சரிக்கையுடன் இருந்து, மாநிலத்துக்கு நல்ல பெயரை நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் நினைவூட்டினார்.
முன்னதாக, மாநில அரசின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் புகை பிடிக்கும் ஒரு அதிகாரியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியது. அதன்பின், அந்த அதிகாரியிடம் எழுத்து மூலம் விளக்கம் அளிக்கம் கோரி ‘ கடிதம்’ வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.




