ஜெனிவா, நவ 5- காசா தீபகற்பத்தின் உள்ளே நுழைய வழிவகை செய்யும் அனைத்து நுழைவாயிலையும் மீண்டும் திறக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் அந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு உணவு பொருட்களை பெருவாரியாக விநியோகம் செய்ய முடியும் என்று உலக உணவு திட்டத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அப்பகுதியில் போர்நிறுத்தம் அமலில் உள்ளது. இதன் காரணமாக சுமார் 1 மில்லியன் மக்களுக்கு அங்கு உணவு பொருட்களை வழங்க ஏதுவாக இருக்க இந்த நுழைவாயில் திறப்பு நடவடிக்கை அவசியமாகிறது.
வடக்கில் உள்ள எல்லை பகுதிகள் ஏன் தற்போது வரை மூடப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை என்று சில ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த முயற்சியை அமெரிக்கா முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டது.
ஆக, காசா பகுதிக்குள் நுழையும் எல்லை நுழைவாயில்களைத் திறக்க வேண்டும் என்று ஐ.நா கேட்டுக்கொண்டுள்ளது.




