கோலாலம்பூர், நவ 5-முன்னாள் சுகாதார அமைச்சரும் அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடினை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வது தொடர்பில் கட்சி இன்னும் விவாதிக்கவில்லை என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக தாமும், கைரியும் விவாதித்ததாகக் கூறப்படுவதை ஸாஹிட் மறுத்தார். ஒரு திருமண விருந்து நிகழ்வில் கைரியைச் சந்தித்ததாகவும், அவர் மீண்டும் அம்னோவில் இணைவது தொடர்பான விவகாரம் விவாதிக்கப்படவில்லை என்றும் ஸாஹிட் தெளிவுபடுத்தினார்.
முன்னாள் சுகாதார அமைச்சரான கைரி, கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு அம்னோ தலைவர் ஸாஹிட்டைக் கடுமையாக விமர்சித்து வந்ததைத் தொடர்ந்து அவர் கட்சியின் ஒழங்கு நடவடிக்கைக் குழுவினால் கடந்த 2023 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.




