கோலாலம்பூர், நவம்பர் 5 — முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் மலேசிய இந்தியர்களைப் பெருவாரியாக ஏமாற்றினார் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
ஆட்சியை முறைகேடாக கைப்பற்றிய நிலையில் இந்தியர்களுக்கு அவர் எந்தவொரு உதவிகளையும் செய்யவில்லை என்று அவர் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், லாடாங் ஜெராம் தமிழ்ப்பள்ளி விவகாரமும் அவரின் தலைமைத்துவத்தில் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
ராயரின் இந்த பகிரங்க குற்றச்சாட்டு என்பது மக்களவையில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தான் சொன்ன இந்த வார்த்தை தாம் ஒருபோதும் திரும்ப பெறபோவதில்லை என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
ஆனால். பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் தலைமையிலான நடப்பு ஒற்றுமை அரசாங்கம் மலேசிய இந்தியர்களின் மீது அதீத அக்கறை கொண்டு பல திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் சொன்னார்.




