லிவர்புல், நவம்பர் 5 — ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் பலம் வாய்ந்த ரியால் மெட்ரிட் அணியை லிவர்புல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
லிவர்புல் அணிக்கான ஒரே ஒரு வெற்றி கோலை அவ்வணியின் மத்திய திடல் ஆட்டக்காரர் மெக் அல்லிஸ்தர் புகுத்தினார்.
இந்த வெற்றியை லிவர்புல் அணி வீரர்களும் ரசிகர்களும் பெருவாரியாக கொண்டாடி வருகிறோம். இதுவே லிவர்புல் அணியின் தரத்தைக் காட்டுவதாக உள்ளதாக லிவர்புல் அணியின் நிர்வாகி அர்னே ஸ்லோட் கூறினார்.
ரியால் மெட்ரிட் அணிக்காக எம்பாப்பே, வினிகஸ் ஜூனியர் ஆட்டக்காரர்கள் தாக்குதல்களைத் தொடுத்தாலும் அனைத்தையும் லிவர்புல் அணியின் தற்காப்பு அரண் முறியடித்ததாக அவர் புகழாரம் கூட்டினார்.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பினான பி.எஸ்.ஜி அணி ஜெர்மனியின் பாயென் முயூனிக் அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டனர்.




