வாஷிங்டன், நவம்பர் 5 —அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா நாட்டின் அதிபர் அஹ்மெட் அல்- ஷாராவை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசவுள்ளார்.
இந்த சந்திப்பானது எதிர்வரும் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்று வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லியாவிட் தெரிவித்தார்.
இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு என்பது அமைதியை முன்னெடுக்கும் அதிபர் டிரம்ப்பின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் வர்ணித்தார்.
உலகில் அமைதியை நிலைநாட்ட அதிபர் டிரம்ப் எந்த நாட்டு தலைவர்களையும் சந்திக்க தயாராக உள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதற்கு முன் சிரியா நாட்டிற்கு எதிராக போடப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்வதாக கடந்த மே மாதத்தில் டிரம்ப் அறிவித்திருந்தார்.
சிரியா நாட்டு தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு வருகை தருவது என்பது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டது.




