பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5 — நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் அஸார் அஸிஸான் ஹருன் பெர்சத்துவின் மேல்முறையீட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை பெர்சத்து கட்சியின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தர். நேற்றிரவு நடைபெற்ற பெர்சத்து கட்சியின் உயர்மட்ட தலைவர் மன்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அஸ்மின் அலி விவரித்தார்.
அதுமட்டுமல்லாமல், இந்த மேல்முறையீட்டு வாரியத்திற்குத் தலைவருடன் சேர்த்து ஐந்து உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
பெர்சத்து கட்சியில் தேசிய தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் சம்பந்தப்பட்ட தலைவர்களை அக்கட்சி நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்த மேல்முறையீட்டு வாரிய உறுப்பினர்களின் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது ஏன் என்று பெர்சத்து கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்ட வான் அஹ்மட் ஃபேசால் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




