கோலாலம்பூர் நவ 4: 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியா செயற்கை நுண்ணறிவு தகுதிப்பாட்டைக் கொண்ட நாடாகும். அதன் இலக்கை அடைவதில் மலேசியா தீவிரம் காட்டி வருவதாக இலக்கவியல் அமைச்சர் மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ கூறினார்.
நாட்டின் தேசிய ஏ.ஐ நடவடிக்கை திட்டமிடலின் மூலம் மலேசியா 2026ஆம் ஆண்டில் அதன் பரிமாற்றத்தை ஏற்படுத்த தீவிரம் காட்டியுள்ளது.
இந்த செயற்கை நுண்ணறிவு திட்டமிடலின் முக்கிய கூறுகளாக சிறந்த நிர்வாக தன்மை, தொழில்நுட்பம், நிலையான முதலீட்டு நடவடிக்கை ஆகியவை பார்க்கப்படுவதாக அமைச்சர் விவரித்தார்.
இந்த இலக்கினை அடைவதற்காக, 2026ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இலக்கவியல் அமைச்சுக்கு அரசாங்கம் 1.36 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது




