புத்ராஜெயா, நவ 4- எதிர்வரும் சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக 80 விழுக்காட்டினர் புதிய முகங்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்படுவார்கள் என்று தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.
தொகுதி பங்கீடு குறித்து 95 விழுக்காடு பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றுவிட்டதாக அவர் கூறினார்.
தேசிய முன்னணி அதன் வியூக திட்டமிடலுடன் தேர்வு செய்யப்பட்ட சில சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்வதில் வேட்கையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தேர்தல் வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் நவம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் இதற்கு முன் அறிவித்திருந்தது.




