ஷா ஆலாம், நவ 4 — கம்போங் புக்கிட் டுகோங் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் சில தொழிற்சாலைகள் மீது காஜாங் நகராண்மை கழகம் (எம்பிகேஜே) நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த தொழிற்சாலைகள் எம்பிகேஜே உள்ளூர் திட்டம் (திருத்தம் 1) 2035 அடிப்படையில் அனுமதியற்ற நிலத்தில் கட்டப்பட்டவை என காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் தெரிவித்தார்.
“நான் இதை எம்பிகேஜே கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவர்கள் நோட்டீஸ் வழங்கி நிலத்தை சரிபார்த்துள்ளனர். தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக இயங்கி வந்தாலும், அவை வணிக மண்டலத்திற்குள் உள்ளன.
“தொழில்சாலை உரிமையாளர்கள் செய்ய வேண்டியது நிலத்தின் பயன்பாட்டு விதிகளை மாற்றி, காஜாங் நகராண்மை கழகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும்,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், மக்கள் புகார்கள் செய்ய ஆரம்பித்துள்ளனர், ஏனெனில், அந்த இடம் கட்டுமான பொருட்களை வைக்க பயன்படுத்தப்படும் போது லாரிகள் அடிக்கடி வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் சில சமயங்களில் திடீர் வெள்ளமும் ஏற்பட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.




