ரியாட், நவ 4- சவூதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மட் பின் சல்மான் எதிர்வரும் நவம்பர் 18ஆம் தேதி அமேரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வருகை தரவுள்ளார்.
அலுவல் பயணம் அவர் அங்கு வருகை மேற்கொண்டு அமேரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
முஹம்மத் பின் சல்மானின் அமேரிக்கா பயணம் அமேரிக்கா- சவூதி அரேபியா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு மேலும் வலுப்பெறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.
அமேரிக்காவிடம் ஆயுதம் வாங்கும் முதன்மையான நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்றாகும்.
சவூதி பட்டத்து இளவரசர் வெள்ளை மாளிகைக்கு வருகை தருவதால் ஒரு முக்கியமான கருத்திணக்க உடன்படிக்கை கையெழுத்தாக உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.




