ஷா ஆலாம், நவ 4- சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள மலேசிய கல்வி சான்றிதழ் அல்லது SPM தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நவம்பர் 3 முதல் டிசம்பர் 23, 2025 வரை நடைபெறும் இந்தத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.தேர்வின் முழு காலப்பகுதியிலும் அனைத்து மாணவர்களும் முழு கவனம் செலுத்தி, ஆரோக்கியத்தைப் பேணி, அமைதியுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
உங்களின் அனைத்து முயற்சிகளும் கடின உழைப்பும் சிறப்பான முடிவுகளை அளித்து, ஒளிமயமான எதிர்காலத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமையும் என்று நம்புகிறேன் என்று மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்





