ஷா ஆலம், நவ 3: இன்று தொடங்கிய 2025ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகள் தெரிவித்தார்.
“தன்னம்பிக்கையாக இருங்கள் மற்றும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மலேசியா மக்கள் அனைவரின் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கும்,`` என அவர் தெரிவித்தார்.
இறைவன் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதித்து, சிறந்த முடிவுகளைப் பெற வேண்டும்,” என்று அவர் தனது முகநூலில் பதிவில் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சகத்தின் (KPM) தகவலின்படி, நாடு முழுவதும் மொத்தம் 413,372 மாணவர்கள் 3 நவம்பர் முதல் 23 டிசம்பர் வரை 3,350 மையங்களில் தேர்வை எழுதவுள்ளனர்.
மேலும், 127,526 தேர்வு பணியாளர்கள் தேர்வு சீராக நடைபெற நியமிக்கப்பட்டுள்ளனர்.




