ஷா ஆலம், நவ 3: சுங்கை பூலோ, கம்போங் டேசா அமான் பகுதியில் உள்ள நான்கு துணி கையிருப்பு தொழில்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஆறு பேர் சுவாசப் பிரச்சனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இன்று காலை 10 மணியளவில் இந்த விபத்து தொடர்பான அவசர அழைப்பை பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி (JBPM) துறை தெரிவித்தது.
சுங்கை பூலோ தீயணைப்பு நிலையத்திலிருந்து உபகரணங்கள், பண்டார் டமன்சாரா, புக்கிட் ஜெலுதோங் மற்றும் செலாயாங் தீயணைப்பு நிலையங்களில் உள்ள உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் செயல்பாட்டு துணை இயக்குனர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மலேசிய சுகாதார அமைச்சகம் (KKM) மற்றும் அவசர உதவி சேவை (EMRS) மூலம் சிகிச்சை பெற்றனர். தீயணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.




