குவாந்தான் நவ 3: நாடு முழுதும் இன்று தொடங்கி டிசம்பர் 23 வரை நாடு முழுவதும் 3,350 மையங்களில் எஸ்.பி.எம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
இந்த எஸ்.பி.எம் 2025 தேர்வெழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பகாங் மாநில ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பஹாங் தெங்கு அம்புவான் துங்கு அஜிஸா அமினா மைமுனா இஸ்கண்டாரியா ஆகியோர் தங்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தங்கள் அதிகாரப்பூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விடாமுயற்சியுடனும் முழுமையான ஆயத்தங்களுடனும் தேர்வுகளை அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும் எனப் பேரரசர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
மேலும், தேர்வெழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுச் செயல்முறை சுமுகமாக நடைபெறவும், அவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்று, மதம், இனம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் அறிவுள்ள தலைமுறையாக உருவெடுக்கவும் அவர்கள் பிரார்த்தித்தனர்.




