கோலாலம்பூர், நவம்பர் 3 — 12 வயது சிறுவனை மக்கள் வீடமைப்பு திட்ட (PPR) உணவக வளாகம் அருகே தாக்கியதாக நம்பப்படும் மூன்று ஆண்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
49 முதல் 61 வயதிற்கிடையில் உள்ள மூன்று மலேசிய ஆண்கள், நேற்று மற்றும் இன்று கிளந்தான் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இரு இடங்களில் தனித்தனியாக கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.
தொடக்க விசாரணையில், குற்றச்சம்பவம் ஒரு நண்பரின் பவர் பேங்கை திருடியதாக சிறுவனை குற்றம் சாட்டிய பிறகு நிகழ்ந்ததாக கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சிறுவனின் நெற்றி மற்றும் வாயில் சிறிய காயங்களுக்கு உள்ளாகி, கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்த கானொலியில் சிறுவன் அமர்ந்திருந்தபோது மூன்று ஆண்களால் சூழப்பட்டு, அடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருந்தன.




