கோத்தா கினாபாலு நவ 3 : எதிர்வரும் 17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர்கள் யார் என்பதை இவ்வார இறுதியில் பிரதமர் அன்வார் அறிவிப்பார் என்று சபா மாநில பிகேஆர் கட்சி தலைவர் டத்தோ முஸ்தஃபா சக்முட் கூறினார்.
பிரதமர் அன்வாரின் பயண விபரங்கள் தங்கள் தரப்புக்குக் கிடைத்ததாகவும் வார இறுதியில் அவர் அம்மாநிலத்திற்கு வருவார் என்று எதிர்பார்ப்பதாக முஸ்தஃபா சக்முட் குறிப்பிட்டார்.
சபா மாநிலத்தில் நடைபெறும் தலைமைத்துவ கூட்டத்தில் நவம்பர் 9ஆம் தேதி அன்வார் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மட்டுமில்லாமல் அனைத்து பிகேஆர் மத்திய நிலை தலைவர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.




