ஷா ஆலம், நவம்பர் 3 — அரசு, இ-ஹெய்லிங் மற்றும் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் பூடி மடாணி ரோன்95 (BUDI95) ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்து வருகிறது. இதன் நோக்கம், எரிபொருள் மானிய நன்மைகள் நியாயமான முறையில் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதாகும்.
கூட்டரசு எரிபொருள் ஒதுக்கீட்டு அளவுகளை மறுபரிசீலனை செய்து வருகிறது, இதன் மூலம் எந்தக் குழுவும் மானியத்திலிருந்து புறக்கணிக்கப்படாமல் இருக்க முடியும் என்று நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார். மேலும் தற்போது முறைமையை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது, விரைவில் இதுகுறித்து மேலதிக அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஈ-ஹெய்லிங் ஓட்டுனர்களுக்கு மாதம் 300 லிட்டர் வரை RON95 மானியம் வழங்கப்படுகின்றது, அதே சமயம் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு 1,400 லிட்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேறுபாட்டை அரசு கவனத்தில் எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
அக்டோபர் 31 நிலவரப்படி, 1 கோடியே 31 இலட்சம் மலேசியர்கள் தகுதியான குடிமக்களில் சுமார் 80 சதவீதம் இந்த மானிய விலையிலிருந்து பயனடைந்துள்ளனர். இதன் மொத்த விற்பனை மதிப்பு RM2.66 பில்லியன் அல்லது 1.33 பில்லியன் லிட்டர் எரிபொருளாகும்.




